எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை ஒரு லீற்றருக்கு ரூ. 5 குறைத்திருந்தாலும், அதன் பயன் நுகர்வோருக்குச் சென்றடையாது என சங்கத் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த திருத்தத்தினால், 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோலின் விலை தற்போது ரூ. 294 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், பிற எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

