யாழ்ப்பாணத்தில் சுமார் ரூபா 4 கோடி பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினர் கவனித்து, அதை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அந்த படகின் உள்ளே சுமார் 185 கிலோகிராம் எடையுடைய கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் ரூ.41 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மீட்கப்பட்ட கஞ்சா, படகு மற்றும் கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

