யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனை செய்து வந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாண பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

