இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற துயரச்சம்பவத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
கிராவல் கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, பொதுப் போக்குவரத்து பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேவெல்லா அருகே ஏற்பட்ட இந்த மோதலில், லாரியில் இருந்த கிராவல் கற்கள் பேருந்தின் மேல் சரிந்தன. இதனால் பேருந்து கடுமையாக சேதமடைந்தது.
“இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்; எட்டு பேர் காயமடைந்துள்ளனர்,” என ஒரு பொலிஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பேருந்தில் சிக்கிய பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(மூலம்: NDTV)

