ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

சட்டமும் அதிகாரமும் சேர்ந்து ஆடும் ஆட்டம்

கம்பஹாவில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி காவல்துறைக்கு இடையூறு விளைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை உயர் காவல் துறை அதிகாரி ஒருவரின் சகோதரியாக பொய்யாக கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தற்போது கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்பட்டுள்ளதால், அதற்கான தீர்ப்பு நீதிமன்றத்தின் பொறுப்பாகும்.

அதிகாரிகளோடு தொடர்பு இருப்பதாக பொய்யாகக் கூறி அல்லது புகழ்பெற்ற பெயர்களைக் குறிப்பிடுவதன் மூலம் தண்டனை தவிர்க்க முயல்வது, போக்குவரத்து விதிகளை மீறுவோரிடையே வழக்கமான ஏமாற்றுத் தந்திரமாக காணப்படுகிறது. சில சமயங்களில் செல்வாக்கு பெற்றவர்கள் சட்டவிரோதமாக தலையிட்டு, பொது காவலர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றத் தயக்கமடைவதும் ஏற்படுகிறது.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை கம்பஹாவில் அந்தப் பெண்ணைத் துரத்தி கைது செய்த காவல்துறை நடவடிக்கை பாராட்டத்தக்க ஒன்றாகும்.
ஆனால் அதே உற்சாகம் ஆட்சிக்கட்சியினருடன் தொடர்புடைய வழக்குகளில் அரிதாகவே காணப்படுகிறது.

கடந்த செப்டம்பரில், சில அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழிநடத்திய மக்கள் விடுதலை முன்னணியினர் (JVP) முன்னணி சோசலிசக் கட்சி (FSP) அலுவலகத்தைக் காவல்துறை முன்னிலையில் சூறையாடிய சம்பவம் இதற்குச் சான்று.
காவல்துறை தாக்குதலாளர்களின் பக்கம் நின்று, பின்னர் அவர்களுக்கு பாதுகாப்பளித்தது.

பின்னர் கம்பஹா கூடுதல் நீதவான் யக்கல காவல்துறைக்கு உத்தரவிட்டார் — சட்டவிரோதமாக அலுவலகத்தைப் பிடித்திருந்தவர்களை வெளியேற்றவும், சொத்துரிமை தொடர்பான தீர்ப்பு வரும் வரை இடத்தை காவல் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கவும்.

இதன் மூலம், காவல்துறையிடம் JVP உறுப்பினர்கள் பொய்யாக கூறியதும் நீதித்துறையின் மரியாதையை அவமதித்ததும் வெளிச்சமிட்டது.
இருப்பினும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையில், SDIG ஒருவரின் சகோதரி என தன்னை கூறுவது விட இச்சம்பவமே கடுமையான குற்றமாகும்.

முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி ரவி சேனவீரத்னே, தற்போது பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருப்பவர், 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற போக்குவரத்து விபத்துக்கான மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை உட்பட இரண்டு கடுமையான வழக்குகளை தன்னிடம் இருந்து நீக்கித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளன.

இதேபோல், ராஜபக்ஷ ஆட்சியில் மெர்வின் சில்வாவுக்கு எதிரான காசோலை மோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டதையும் மக்கள் மறக்கவில்லை.

மேலும், ஒரு பிரதி அமைச்சர் மற்றும் தேசிய மக்கள் அதிகாரத்தின் (NPP) எம்.பி. ஒருவரை மோசடி வழக்கில் கைது செய்யாமல் காவல்துறை தாமதித்ததையும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால், அரசுக்கு எதிராகச் செயல்படும் எவரையும் சிறிய குற்றங்களுக்குக் கூட உடனே கைது செய்கின்றனர்.

2025 மே 1 அன்று, தேசிய மக்கள் அதிகாரத்தின் தொழிலாளர் தின பேரணிக்காக புறப்பட்டிருந்த துஏP ஆதரவாளர்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தங்கள் பேருந்துகளை சட்டவிரோதமாக நிறுத்தி, அங்கு உணவருந்தியும் ஆடிப்பாடி இருந்தனர்.
காவல்துறை அதை பொருட்படுத்தவில்லை. ஆனால், அவர்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள் இருந்திருந்தால், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

2024 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அரசு, ஆரம்பத்திலேயே பொய்யின் மேல் துவங்கியது.

அப்போது நாடாளுமன்ற சபாநாயகர் அசோக ரண்வலா ஜப்பான் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதாகக் கூறியபோது, அரசு அதனை ஆதரித்தது.

ஆனால் உண்மைக்கான சான்றுகள் கேட்கப்பட்டபோது, அவரைத் துறந்தது. ‘மீன் தலைப்பகுதியிலிருந்தே அழுக ஆரம்பிக்கும்,’ எனப் பழமொழி ஒன்று கூறுகிறது.

இன்றைய ஆட்சி“Orwell” எழுதிய Animal Farm போன்று மாறிவிட்டதா? சட்டத்தின் ஆட்சியை மீட்டதாகக் கூறும் இந்நிலையிலும், அனைவரும் சமம் என்றாலும் ஆட்சிக் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நெருங்கியவர்கள் மற்றவர்களை விட ‘அதிக சமம்’ என்ற நிலை உருவாகி விட்டதா என்ற கேள்வி எழுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசிரியர் கருத்துக்கள்

வீடு கட்டிக் கொடுத்தால் வேட்பாளராகலாம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் வீடு மாவிட்டபுரத்தில் உள்ளது. மாவையின் பூர்வீக வீடு யுத்தத்தில் முற்றாக சிதைந்தது. யுத்தம் முடிந்த பின்னர் அந்த
கட்டுரை

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில் முனைப்பாக வெளிக்காட்ட முடியும் – கலாநிதி ஜெகான் பெரேரா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு பிறகு ஒரு கணமேனும் தாமதிக்காமல் அவருக்கு நேசக்கரம்