பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் டகோபெர்ட் ரெனூப் தனது திருமணச் செலவுகளைச் சந்திக்க வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார் — தனது திருமண உடையான டக்ஸிடோவில் விளம்பர இடத்தை விற்று!
ரெனூப் கடந்த ஜூலையில் தனது திட்டத்தை அறிவித்தார். திருமணத்தை ஒரு வணிக வாய்ப்பாக மாற்றிய அவரது யோசனை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இத்திட்டத்தில் 26 தொடக்க நிறுவனங்கள் (Startups) கலந்து கொண்டு அவரது திருமணத்திற்கு நிதி உதவி வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வித்தியாசமான முயற்சி சமூக ஊடகங்களில் நகைச்சுவையுடன் பேசப்பட்டு வருகிறது. இதன் மூலம் தனது திருமணச் செலவின் பெரும்பகுதியை விளம்பர ஆதரவு மூலம் ஈடு செய்துள்ள ரெனூப், இதனை நிறுவனங்களுக்கு ஒரு விளம்பரச் செலவாகக் கணக்கிடும் வகையிலும் திட்டமிட்டுள்ளார்.

