மேல் நீதிமன்றங்களில் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட நான்கு வெற்றிடங்களில் நான் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அழுது வடிகிறார்
எனக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு மறுக்கப்பட்டதாகவும், அது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிய நான்கு கடிதங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குமுறுகின்றார்
லண்டனில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் 50 ஆண்டு வரலாற்றில் ஒரே தமிழனாக அதன் தலைவராக நியமிக்கப்பட்டதாக பெருமை வெளியிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு சங்கத்தின் பொன்விழா கொழும்பில் அவரது தலைமையில் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்
2025 ஜனவரி 20-ஆம் திகதி, அவர் 60 வயதை நிறைவேற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு வழங்கப்படாததால் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதாக கண்ணீர்வடிக்கின்றார் இளம்செழியன்.

