யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரைச் சேர்த்து, மொத்தம் ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு யாழ்ப்பாண நகரில் நடைபெற்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவத்துடன் நேரடி தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி மற்றும் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.


