நீதித்துறை சேவை ஆணைக்குழு (Judicial Service Commission – JSC) நடத்திய ஒழுக்காற்று விசாரணைகளின் அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைச் சேர்த்து மொத்தம் 20 அதிகாரிகள்; பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக JSC தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலின்படி, இவர்களில் ஏழு அதிகாரிகள் நேரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள், மற்றவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டவோ அல்லது கட்டாய ஓய்வுக்கு அனுப்பப்பட்டவோ வாய்ப்புள்ளதாக தெரியவருகின்றது.
இந்த ஒழுக்காற்று நடவடிக்கை, பொது மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டதாகவும், சில முறைப்பாடுகள் ஊழல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியதாகவும் கூறப்படுகிறது.
கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய அதிகாரிகள் மீது முறையான ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்கள் அதிகாரப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர் எனவும் மூலங்கள் தெரிவித்தன.
விசாரணை முடிவுகளின் அடிப்படையிலேயே துளுஊ இந்நடவடிக்கைகளை மேற்கொண்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நீக்கப்பட்டவர்களில் ஒருவரான உயர் நீதிமன்ற நீதிபதி, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி ஜநக் டி சில்வா தலைமையிலான தனி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதிய வயதிற்கு நெருங்கியிருந்த சில அதிகாரிகள் சிறிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக காணப்பட்ட நிலையில், கட்டாய ஓய்வு பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் மூலங்கள் குறிப்பிட்டுள்ளன.

