உள்ளூர்

போதைக்கு எதிரான போரில் இணையுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்அமைச்சர் சந்திரசேகர்

போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேசியப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

“இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம், அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் மற்றும் குற்றவாளிகளை முழுமையாக துடைத்தெறிவோம். சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்,” என அமைச்சர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் இணைந்து 2025 நவம்பர் 4ஆம் தேதி சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடத்திய “நடமாடும் சேவை” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், மாவட்ட செயலாளர் ம. பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் சத்தியசோதி, நகரசபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் தனது உரையில் மேலும் கூறியதாவது:
“யாழ்ப்பாண மாவட்டம் தற்போது போதைப்பொருள் விற்பனையாளர்கள், கஞ்சா கடத்துபவர்கள், வாள்வெட்டு குழுக்கள் போன்ற குற்றவாளிகளின் செயலால் சீரழிந்து வருகிறது. இதற்குத் தீர்வு காணுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அந்தக் கும்பல்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,” என்றார் அவர்.

அவர் தொடர்ந்தும் கூறினார்:
“போதைப்பொருளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதாளக் குழுக்களின் பின்னணியில் ‘கறுப்பு நிர்வாகம்’ என்ற ஒரு மறைமுக பொறிமுறை இயங்குகிறது. இதற்கு சிலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக்கின்றனர். அந்த அமைப்புகளின் பின்னணியில் கறுப்பு பணமே விளையாடுகிறது.

இந்த நிலைமையைப் புறக்கணிக்க முடியாது; அது எமது இளைய தலைமுறைக்கு துரோகமாகும். யுகத்துக்கு முடிவு கட்டப்படும். சட்டப்பூர்வமாக செயற்படும் அரசாங்கம் தான் நாட்டை ஆள வேண்டும்; கறுப்பு உலகத்தால் நிர்வாகம் நடைபெற அனுமதிக்க முடியாது.”

அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்:
“மக்களுக்காகச் செயல்படுவதே எமது அரசாங்கத்தின் நோக்கம். ஊழல் மற்றும் மோசடிகளற்ற தூய நிர்வாகத்திற்கான பயணத்தில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக அரச ஊழியர்கள் தங்கள் பங்களிப்பை உறுதியாக வழங்க வேண்டும்; அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசாங்கத்தால் வழங்கப்படும்.”

இறுதியாக, அமைச்சர் உறுதியுடன் கூறினார்:
“போதைப்பொருளுக்கு எதிரான இந்த சமர் ஆரம்பமாகியுள்ளது. மக்கள் அஞ்சாமல் அதில் பங்கேற்க வேண்டும். தகவல்களை உரிய தரப்பினருக்கு வழங்குங்கள், எதற்கும் அஞ்ச வேண்டாம். இளைஞர்களே முன்னே வாருங்கள் — உங்களுக்குப் பின்னால் அரசாங்கம் நிற்கும். சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்!” எனத் தெரிவித்தார் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்