மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆராய்ந்து மேம்படுத்துவதற்கான சர்வதேச கேள்வி அறிவித்தல் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக பெட்ரோலிய வளங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசாங்கம் இதற்கு முன்பு, மேல்மட்ட பெட்ரோலிய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான சர்வதேச கேள்வி அறிவித்தல செயல்முறையை ஒருங்கிணைக்க அனுபவம் வாய்ந்த ஆலோசனைக் குழுவைத் தேர்ந்தெடுக்க முன்வந்தது.
எனினும், புதிய ஆலோசகர் நியமிக்கப்பட்டாலோ இல்லையோ, மன்னார் வளைகுடா ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான புதிய சர்வதேச கேள்வி அறிவித்தல்களை அரசாங்கம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற ஊடகப்பிரிவு 2021 ஆம் ஆண்டில் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, மன்னார் வளைகுடாவில் சுமார் 267 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது, உலகம் முழுவதிலுமிருந்து பல தேசிய மற்றும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இவ் கேள்வி அறிவித்தல் செயல்முறையில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கேள்வி அறிவித்தல் விண்ணப்பங்கள் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை திறந்தவாறு இருக்கும்.
தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசாங்கம் இந்நடவடிக்கையை விரைவுபடுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.
மன்னார் வளைகுடாவில் உள்ள நான்கு கிணறுகள் அபிவிருத்திக்காக திறக்கப்படவுள்ளன.
இந்திய நிறுவனமான ஊயசைn டுயமெய டுiஅவைநன, 2011 ஆம் ஆண்டில் மன்னார் வளைகுடாவில் இரண்டு ஆய்வுக் கிணறுகள் தோண்டி, டீயசசயஉரனய மற்றும் னுழசயனழ எனப்படும் பகுதிகளில் இயற்கை எரிவாயுவை கண்டறிந்தது.
இலங்கை 2020 செப்டம்பரில் இயற்கை எரிவாயு தொடர்பான தேசிய கொள்கையை வெளியிட்டது.
இதில் உள்நாட்டு தேவையை உருவாக்கும் வழிமுறைகள் மற்றும் கடல்சார் எரிவாயுவை வணிக ரீதியாக பயன்படுத்தும் வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021 ஆம் ஆண்டு பெட்ரோலிய வளங்கள் சட்டம் எண் 21 மூலம் ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
கத்தார், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எண்ணெய் நிறுவனங்கள் இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளன.
இலங்கை அரசு, தன்னுடைய கடல் எல்லைகளில் கண்டறியப்பட்டுள்ள பெட்ரோலிய வளங்கள் வணிக ரீதியாக பெரும் மதிப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

