யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று (திங்கட்கிழமை, 3) உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.
உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகவலின்படி, அவர் இதற்கு முன்பும் ஒருமுறை உயிர்மாய்க்க முயற்சி செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் மனஅழுத்தத்தில் கிணற்றில் குதித்து உயிர்மாய்த்துக்கொண்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

