வட மாகாண மீனவர்கள் மற்றும் தேசிய மீன்பிடித் தோழமை இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த போராட்டம் மற்றும் கருத்தரங்கம் அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடமாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்று கூடி, சட்டவிரோதமான மீன்பிடித் தொழில்களை தடுக்கவும், தமிழ்மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக வடக்கு மீனவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும், அரசு இதுகுறித்து விரைவில் தீர்வுகளை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

