உள்நாட்டு வரித்துறை (Inland Revenue Department – IRD) பதிவு செய்யப்பட்ட
அனைத்து நபர்களும் 2024/2025 மதிப்பீட்டாண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அத்துடன், குறிப்பிட்ட நேரக்கெடுவை மீறி அறிக்கை சமர்ப்பிக்க தவறுபவர்களுக்கு, 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உள்நாட்டு வரி சட்ட எண் 24ன் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்கள் அல்லது உதவிக்காக, பொதுமக்கள் 1944 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவோ, www.ird.gov.lk இணையதளத்திற்குச் சென்று தகவல் பெறவோ, அல்லது அருகிலுள்ள உள்நாட்டு வரித்துறை பிராந்திய அலுவலகத்தை அணுகவோலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

