தம்பகல்ல பொலிஸ் பிரிவின் பஹலவத்த பகுதியில் வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹலவத்த, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு, 09 மிமீ வகை 05 வெடிமருந்துகள், 25 வு56 வெடிமருந்துகள், 03 வு56 வெடிமருந்துகள், 01 ஆ16 வெடிமருந்துகள், 04 வெடிமருந்து பைகள், 03 பெல்ட் ஆர்டர்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

