யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடரூந்து பளை பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் பளை பகுதியில் இடம்பெற்றது.
யாழில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வந்த புகையிரதம், பளை சந்தியில் ஓர் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

