பதுளை நகர மத்தியில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் நேற்று மாலை (20-05) இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில், மூத்த சகோதரர், இளைய சககோதரை அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், காயமடைந்த இளைய சககோதரரின் உயிர், அறுவை சிகிச்சை நிபுணரின் திறமையால் காப்பாற்றப்பட்டதாக பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் முகநூலில் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,”இளைய சககோதரர் ஏற்கனவே மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த நபர் முன்னதாக சுமார் ஒரு மாத காலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார் என்றும் வைத்தியர் கூறியுள்ளார்.
இந்த இரண்டு சகோதரர்களும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, காயங்களை ஏற்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

