ஏதோ ஒரு நாள் அறிக்கையில் ஏதோ ஒருநாள் ரோடு ஷோ செய்து விட்டு செல்கின்ற முதலமைச்சர் இல்லை எங்கள் முதலமைச்சர்.
2026-ம் ஆண்டு மகுடம் சூட்ட தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தை விமர்சித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பது பற்றி அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
நேற்று முளைத்த காளான்களுக்கு எல்லாம் இன்று பதில் சொல்ல தயாராக இல்லை. களத்திற்கு வரட்டும் அவர்கள் எந்த வகையில் அடிக்கிறார்களோ அதை விட 100 மடங்கு வேகமாக ஒரே அடியில் பிடரி சிலிர்க்கின்ற வகையில் அடிப்பதற்கு தி.மு.க. களத்தில் தயாராக நிற்கின்றது. ஏதோ ஒரு நாள் அறிக்கையில் ஏதோ ஒருநாள் ரோடு ஷோ செய்து விட்டு செல்கின்ற முதலமைச்சர் இல்லை எங்கள் முதலமைச்சர். அனுதினமும் மக்களோடு மக்களாக பயணிக்கக்கூடியவர்.
2026-ம் ஆண்டு மகுடம் சூட்ட தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். இது போன்ற அறிக்கைகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்ற இந்த கட்டுமானம் கடற்கரை கட்டிய மணல் கோட்டைக்கு சமமானது. நிச்சயம் தகர்க்கப்படும், தகர்த்து எறியப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

