வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார்.
எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெந்துரன சந்திப்பில் உள்ள ரயில் வீதிக்கு அருகில் நேற்று (30) இரவு, மூன்று பேர் மீது குழுவொன்றினால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் படு காயமடைந்த மூவரும் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
காயமடைந்த மற்ற இருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் இத்தமல்கொட, கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்>தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைத்த நகைகளை திருப்பி தருமாறு கோரிக்கை!

