உள்ளூர்

அநுரவின் சிந்தனைக்கு எதிர் மறையாக தேசிய மக்கள் சக்தி வடபகுதியில் இயங்குகின்றது!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு எதிர் மறையாக தேசிய மக்கள் சக்தி வடபகுதியில் இயங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளராகிய பொன்சுதன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (01) சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

{{CODE2}}

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தேசிய மக்கள் சக்தியின் உயர்ந்த கொள்கையானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உயரிய சிந்தனைக்குள்ளாள் உதயமானது.

ஆனால் குறிப்பாக வடபகுதியில் தேசிய மக்கள் சக்தி நடந்து கொள்ளும் விதமானது நேர் எதிராக காணப்படுகின்றது.

ஜனநாயகம் என்பது ஒரு சிறிதளவும் இருப்பதாக இல்லை

மக்களுடைய ஆணைக்கு எதிராக, ஜனநாயக விரோதமாக நடந்து கொள்ளும் போது இதனை நாங்கள் தட்டிக் கேட்க முனைந்தால் தேசிய மக்கள் சக்தியில் ஒரு தலைமைத்துவத்துடன் எமது பிரச்சினையை கரிசனையோடு கேட்பதற்கு ஒரு பண்புள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் இங்கில்லை.

ஜனாதிபதியின் கொள்கையை ஏற்று,அவரது கருத்துக்களை நம்பித்தான் நாம் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணி புரிந்தோம்.

ஆனால் தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளை போன்றுதான் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது.

இது தொடர்பாக நான் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் பலருடன்,அமைச்சர் சந்திரசேகரனுடன் கலந்துரையாடினேன்.

நேற்று முன்தினம் பிற்பகல் 02 மணிக்கு அமைச்சர் தன்னை சந்திப்பதற்கான அனுமதியை எனக்கு வழங்கியிருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு வாருங்கள்,அங்கு நாம் மேற்கொண்டு கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

பிற்பகல் 02 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு சென்ற நான் மாலை 06 மணி கடந்தும் அமைச்சரை சந்திப்பதற்காக அங்கேயே காத்திருந்தேன்.

02 மணிக்கு வருமாறு கூறிய அமைச்சர் அலுவலகத்தில் இல்லாததால் அவரது உதவியாளர்களிடம் பல முறை தெரிவித்தும் சந்திப்பதற்கு தான் வருவதாக கடசிவரை அவர் கூறவில்லை.

பின்பு அவர் இன்னொரு கலந்துரையாடலுக்கு சென்றுவிட்டதாக அழைப்பு வந்தது

ஆனால் அமைச்சர் எங்கு சென்றார் என்பதனை தேடி அறிந்த போது யாழ் தியேட்டர் ஒன்றில் அந்த நேரத்தில் அமைச்சர் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவ்வாறு என்றால் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் கட்சிக்காக உங்களுக்காக உழைத்த ஒருவரை சந்திக்க அழைத்து விட்டு நீங்கள் படம் பார்க்க சென்றிருக்கிறீர்கள் என்றால் ஜனாதிபதியின் கருத்தியலுக்கு ஏற்ப மக்களுக்கு எவ்வாறு நீங்கள் சேவை செய்ய போகின்றீர்கள்

கட்சிக்காக அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய எம்மையே அரவணைக்க தெரியாத நீங்கள் இந்த மக்களை எப்படி அரவணைக்க போகின்றீர்கள்?

எல்லோரையும் அரவணைத்து அன்பாக இனவாதம் இன்றி வழி நடத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்திய போதும் கட்சி அலுவலகத்திற்கு என்னை அழைத்து அமைச்சர் நடத்திய விதம் ஒரு வெறுப்பான உணர்வை தந்துள்ளது

02.00 மணிக்கு அலுவலகம் சென்று 06.00 பின்பு வீடு திரும்பும் வரை தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களால் தண்ணீர் கூட தரப்படவில்லை.

தமிழ்,சிங்கள மக்களுக்கு இருக்க கூடிய மனித நேயம் தேசிய மக்கள் சக்திக்கு காணப்படவில்லை.

ஆகவேதான் அலுவலகத்தில் பல மணி நேரம் இருந்த எனக்கு சொட்டு தண்ணீர் கூட தரவில்லை.

கட்சிக்காக வேலை செய்த எங்களுக்கே இந்த நிலை என்றால் எதிர்காலத்தில் மக்களின் கதி கேள்விக் குறிதான் ஜனாதிபதியின் எண்ணங்களுக்கு எதிராக மக்களின் ஆணைகளுக்கு எதிராக அனுரகுமார திசாநாயக்கவிற்கு துரோகம் செய்யும் வேலைகளில் வட பகுதி தேசிய மக்கள் சக்தியினர் செயல்படுகின்றனர்.

இது ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.

ஜனாதிபதி நினைக்கலாம் தேசிய மக்கள் சக்தியை வட பகுதியில் இவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று தேசிய மக்கள் சக்தியை அழிப்பதற்கு வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை உள்ளுக்குள் இருந்து சிதைப்பதற்கே இங்கு நிறைய பேர் இருக்கின்றனர்.

இந்த நிலை தொடருமாக இருந்தால் மிக விரைவில் தேசிய மக்கள் சக்தி வட பகுதியில் ஆட்டம் காணும் என்பதே என்னுடைய உறுதியான கருத்து.

இதனை சரி செய்ய வேண்டும் என்றால் உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு ஊழல் கரங்களுடன் தேசிய மக்கள் சக்தியில் இருப்பவர்களை வெளியேற்றி நம்பி வாக்களித்த மக்களுக்கும்,தேசிய மக்கள் சக்தியுடன் பயணித்தவர்களுக்கும் நீதியை வழங்க வேண்டும் என்றார்.

இதையும் படியுங்கள்>தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்