ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களில் ஒருவராகக் கூறப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சரா ஜாஸ்மினின் மூன்றாவது டி.என்.ஏ மாதிரியின் சேகரிப்பு முறையைப் பற்றிய கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன என்று பொது பாதுகாப்புத் அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாயந்தமருதில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சரா ஜாஸ்மின் உயிரிழந்தாரா என்பதைக் கண்டறிய முன்னர் இரு தடவைகள் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் அந்த இரண்டிலும், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் பொருந்தாத விளைவுகள் கிடைத்தன.
ஆனால், மூன்றாவது தடவையில் சேகரிக்கப்பட்ட மாதிரி அவரது தாயுடன் பொருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த மாதிரி எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பது தொடர்பாக கடும் சந்தேகங்கள் இருப்பதாகவும், இது மிகுந்த உணர்வுபூர்வமான விசாரணையாக இருப்பதால் குற்றவியல் விசாரணைப் பிரிவு இதை விரிவாக ஆராய்ந்து, தேவையான நேரத்தில் நீதிமன்றத்தில் தகவல்களை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, 2019-இல் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பலத்த முறையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க பதவியேற்றதையடுத்து, வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
2024 செப்டெம்பர் 23ஆம் திகதி புதிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகவும், 2019-இல் பணியிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய ஊஐனு அதிகாரிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு, விசாரணைகளைத் தொடர உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழர் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அதாவது பிள்ளையானின் முன்னாள் உதவியாளரான ஹன்சீர் அஸாத் மௌலானா வழங்கிய தகவல்களின் அடிப்படையில் 2024 நவம்பர் 13ஆம் திகதி புதிய விசாரணை சட்டத்துறை யோசனையுடன் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
அஸாத் மௌலானா வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் பல விசாரணைக் குழுக்கள் தற்போது பணியாற்றி வருவதாகவும், அவரை இலங்கைக்கு மீள அழைக்கும் விதத்தில் சட்ட, தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.
அத்துடன், இந்த தாக்குதல்களில் இரகசிய சேவையின் தொடர்பு குறித்தும், அவர்கள் கடமைகளை தவிர்த்ததா அல்லது தீவிரவாத குழுக்களுக்கு துணைபுரிந்தார்களா என்பதையும் CID ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பிள்ளையான் 2025 ஏப்ரல் 8ஆம் திகதி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் காணாமல் போன வழக்கு, போலீசாரின் கொலை, சட்டவிரோத ஆயுதம் வைத்திருப்பு ஆகிய குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
2025 ஏப்ரல் 21ஆம் திகதி அவரை மட்டக்களப்பு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது
விசாரணைகளில் அவர் தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்திருந்ததுடன், இராணுவ உளவுத்துறை உறுப்பினர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெறுகின்றன.
பொலிஸாரின் கொலை தொடர்பாக வவுனத்திவு பகுதியில் நடைபெற்ற மற்றொரு வழக்கு குறித்தும் அவர் பேசியுள்ளார்.
தொடக்கத்தில் வழக்கை தவறாக வழிநடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், தற்போது உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ரவி சேனவிரத்னவிடம் இந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊஐனு தற்போது ஜனாதிபதி விசாரணைக் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
பதவியிலுள்ளவர்கள் என்றாலும்கூட, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை சட்டத்திற்கு முன்வைத்தே தீர விசாரிக்கப்படுவர் வேண்டியது என்ற உறுதிமொழியும் அரசாங்கத்தால் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறன்று 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள மூன்று தேவாலயங்களும், மூன்று உயர் தர ஹோட்டல்களும் ஒரே நேரத்தில் தற்கொலைக் குண்டுவெடிபொருளால் தாக்கப்பட்டன.
அதன் பின்னர், தெமட்டகொட மற்றும் தெஹிவளை பகுதியில் மேலும் இரண்டு வெடிவிபத்துகள் இடம்பெற்றன.
இத்தாக்குதல்களில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், இதில் 45 வெளிநாட்டவர்களும் அடங்குவர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதாக தொடர்ந்த குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.
தற்போதைய அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு உரிய நீதி வழங்குவதற்கும், பொறுப்பாளர்களை சட்டத்திற்கு முன்வைப்பதற்கும் உறுதியளித்துள்ளது.

