இன்று காலையில், ஹிரண பொலிஸ் பிரதேசத்தின் மாலமுள்ள பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கி சுடுதலால் காயமடைந்த நபர் பானந்துரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
காயமடைந்தவர் 32 வயது, மாலமுள்ள பகுதியில் வசிப்பவர்.
துப்பாக்கி சூட்டிற்கான காரணமும் சந்தேக நபர்களின் தொடர்பும் இதுவரை தெரியவில்லை;
துப்பாக்கி சூடுக்கு பிஸ்டல்ரக துப்பாக்கி ; பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று காவல் துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களை பிடிக்க காவல் துறையின் மூன்று குழுக்கள் மேலதிக விசாரணைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

