உள்ளூர்

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை அம்போ என விட்ட சீனா

சீனாவின் சைனோபெக் நிறுவனம் முன்னெடுத்துள்ள அமெரிக்க டொலர் 3.7 பில்லியன் மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய முதலீட்டு முயற்சியாக இருந்தது. ஆனால் தற்போது அந்தத் திட்டம் தடுமாறும் நிலையில் உள்ளது.

அதன் காரணமாக, இத்திட்டத்துக்கான முதலீட்டையும் சைனோபெக் இன்னும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை அரசு முதலில் வெளியிட்ட டெண்டர் (tender) நிபந்தனைகளின்படி, இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தயாரிக்கப்படும் எண்ணெய்யில், 20மூ மட்டுமே உள்ளூர் சந்தையில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 80% எண்ணெய் வெளியுறைக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றதே அந்த நிபந்தனை.

ஆனால் தற்போது சைனோபெக் நிறுவனம், அதிகளவிலான எண்ணெய்யை உள்ளூர் சந்தையில் விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோருகிறது. இதனால் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன.

இதுபற்றிக் கருத்து தெரிவித்த மத்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) மேலாளர் டாக்டர் மயூர நெத்திக்குமாரகே, ‘இந்த 20ம% வரம்பு முதலில் வெளியிடப்பட்ட டெண்டரின் நிபந்தனை.
இதை மாற்ற வேண்டுமென்றால், அரசாங்கம் தனித்த உடன்படிக்கையோ அல்லது அதிகாரப்பூர்வ திருத்தமோ செய்ய வேண்டும்.
இது (CPC) -இன் சிக்கல் இல்லை’ என தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, ‘இந்த உடன்படிக்கை எப்போது இறுதி படி அடையும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை’ என கூறினார்.

இந்த திட்டம் இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக கருதப்படுகிறது. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க 2025 ஜனவரியில் சீனாவுக்குச் சென்றபோது இந்த ஒப்பந்தம் முறையாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஹம்பாந்தோட்டை சீனக் கையளிப்பு துறைமுகத்திற்கு அருகில், ஒரு நவீன எண்ணெய் சுத்திகரிப்பு மையம், நாளொன்றுக்கு 2 லட்சம் பேரல்(barrels) எண்ணெய் சுத்திகரிக்கும் திறனுடன் நிறுவப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் மூலம் வெளிநாட்டு செலவீனை அதிகரிக்கும் வகையில் ஏற்றுமதி வலையை உருவாக்குவதுதான் இலக்காக இருந்தது. ஆனால் உள்ளூர் சந்தை பங்கீடு குறித்த முரண்பாடு, திட்டத்தை மிக முக்கியமான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்