அம்பாறை மாவட்டம், பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், பொத்துவில் மகளிர் பொலிஸ் அதிகாரிகளால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் தகவலின்படி, அந்த பெண் ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றொரு ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் எந்தவிதமான உடை அற்ற நிலையில் நடந்து சென்றுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண், இன்று (ஜூலை 15) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

