மனித புதைகுழிகள் தொடர்பாக முறைப்பாடுகள் பெறப்பட்டால், நீதிமன்ற அனுமதியுடன் காவல்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்குமென பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்
காவல்துறையின் முக்கிய பங்கு அகழ்வு பணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது மட்டுமெ என தெரிவித்த அவர் அகழ்வு பணிகளை மேற்கொள்வதல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்
மனித புதைகுழிகள் தொடர்பான முறைப்பாடுகளை நீதிமன்றத்துக்கு தெரிவித்துவிட்டு, அதன் கட்டளையின்படி பொலிஸார் செயல்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த கால அரசாங்கத்தில் இருந்தவர்கள்; இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றிருந்தாலும் அதுபோல் நடக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இலங்கையில் பல இடங்களில், குறிப்பாக யாழ்ப்பாணம் செம்மணி, மன்னார், மாத்தளை, முல்லைத்தீவு போன்ற இடங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சுயாதீன விசாரணைகளை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

