2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், நேற்று (16-7)ஆம் திகதி பிற்பகலில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதில் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலை, திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் போக்குகள் குறித்து ஜனாதிபதி விரிவாக ஆராய்ந்தார்.
வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு அரச நிறுவனமும் தங்களது மதிப்பீடுகளை செலவின வரம்பிற்குள், ஜூலை 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கலந்துரையாடலின் போது, டிஜிட்டல்மயமாக்கல், பொதுப் போக்குவரத்தின் மேம்பாடு, கிராமிய சமூகங்களின் பொருளாதார பங்களிப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது கட்டாயம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மட்டுமின்றி, அதன் மக்கள் பயனளிக்கும் செயல்திறனையும் கண்காணிக்க, தேவையான பொறிமுறைகளை உறுதிப்படுத்தும் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பில், தொழில் அமைச்சர், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

