கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஈழத் தமிழரான கேரி அனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கனடிய குடியுரிமை வழங்க வலியுறுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த தகவலின் பேரில், செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனடிய குடியுரிமை வழங்குமாறு 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் முகமையிடம் அனந்தசங்கரி இரு கடிதங்களை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதங்களில், செல்வகுமார் கனடிய நாட்டில் பிறந்த குழந்தையின் தந்தையாவார் என்பதையும், குடும்ப பிரிவினைத் தவிர்க்கும் நோக்கிலும், மனிதாபிமான அடிப்படையிலும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கடிதங்கள் அனந்தசங்கரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கனடா குடியுரிமை, அகதிகள் மற்றும் குடியேற்றம் அலுவலகம் (ஐசுஊஊ) செல்வகுமாரின் டுவுவுநு தொடர்புகளை மேற்கோளாக கொண்டு அவருடைய குடியுரிமை விண்ணப்பத்தை பலமுறை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை, அனந்தசங்கரியின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி விரிவாக கருத்துரைப்பது உகந்ததல்ல எனக் கூறப்பட்டுள்ளது.

