காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்ததாவது:
தற்போது காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் வழியாக பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான கட்டணங்கள் பின்வருமாறு உள்ளன:
இருவழி கட்டணம் – ரூ. 28,300
ஒருவழி (காங்கேசன்துறை முதல் நாகபட்டினம்) – ரூ. 12,100
ஒருவழி (நாகபட்டினம் முதல் காங்கேசன்துறை) – ரூ. 16,000
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் பெறக்கூடிய விசேட சலுகைகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இக்கப்பல் சேவை, செவ்வாய்கிழமை தவிர்ந்த பிற ஆறு நாட்களிலும் வழமைபோல் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. சேவையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அவை தொடர்பான தகவல்கள் முற்கூட்டியே அறிவிக்கப்படும் எனவும் பணிப்பாளர் ஜெயசீலன் குறிப்பிட்டார்.

