இணைய வழியில் நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் சட்டவிரோதமாக புகுந்து 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று (17-7) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்டவர் ரு{ஹனு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 25 வயதுடைய வவுனியா – புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
தகவல் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

