தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான பாடகர்கள் மற்றும் இசைக் குழுவினர், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிக்காக, இன்று யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.
இவர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த இசை நிகழ்ச்சி, நாளை சனிக்கிழமை (19-07) மாலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் வருவாயின் மூலம், மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்து ஒன்றை கொள்வனவு செய்யும் நோக்கத்துடன் நிதி திரட்டும் முயற்சியாக இது நடைபெறுகிறது.
இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக இல்லாமல், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ சமூகத்தின் நலனுக்காக ஏற்பாடு செய்யப்படும் செயற்கால நிகழ்வாகும் என மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

