மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் கட்டடம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இப்பார்வை இடம்பெற்றது.
இதற்கு முன்னதாக, மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பழைய கச்சேரி மற்றும் யாழ்ப்பாணக் கோட்டை ஆகியவற்றை புனரமைப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு அவசியம் என மாவட்ட செயலர், உலக வங்கி குழுவினரிடம் வலியுறுத்தியிருந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க, உட்கடுமாணம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு இணங்க கடந்த இரண்டு மாதங்களாகவே உலக வங்கி குழுவினர் வடக்கின் பல பகுதிகளில் திணைக்களங்களுடன் இணைந்து செயற்றிட்டங்களையும், அதன் சாத்தியநிலைகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

