இவ்வழக்கு நேற்று (ஜூலை 21) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த வழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கும் சட்டமா அதிபருக்கும் நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்பித்திருந்தது.
ஆனால்இ சட்டமா அதிபர் சார்பில் எவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இருப்பினும் காணாமல் போனோர் அலுவலகத்தைச் சேர்ந்த இரண்டு சட்டத்தரணிகள் ஆஜராகிஇ தங்களது நிலைப்பாட்டை விளக்கினர்.
அவர்கள்இ மனிதப் புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தொடர்ந்து உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிஇ 2020ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட திட்ட வரைவை தற்போதைய காலநிலைப்பாட்டிற்கு ஏற்ப மீளாய்வு செய்து மறுமுறையாக சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
மேலும்இ சட்டமா அதிபர் அடுத்த அமர்வில் ஆஜராகுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் முறைப்பாட்டாளராக அப்துல் மஜீத் அப்துல் ரவூப் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
அவரின் சார்பில் ‘குரல்கள்’ இயக்கத்தின் சட்டத்தரணிகளும் ஆஜராகினர்.
1990 ஜூலை 12ஆம் திகதிஇ ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய ஹாஜிகள் மற்றும் வியாபாரிகள்இ குருக்கள்மடம் பகுதியில் கடத்திக் காணாமலாக்கப்பட்டுஇ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அவர் 2014ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்ததோடுஇ அத்தகவலின் அடிப்படையில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2025 ஜூலை 11ஆம் திகதிஇ அவரது அறிவுறுத்தலின்பேரில் வழக்கை திறந்த மன்றத்தில் மீண்டும் எடுத்துக்கொள்ளும் வகையில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

