இலங்கை, சமீபத்தில் வெளியான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு- iனெநமள (ர்நடெநல Pயளளிழசவ ஐனெநஒ) தரவரிசையில் ஐந்து நிலைகளை முன்னேறி, 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 96வது இடத்திலிருந்து 91வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
இது, கடந்த ஆண்டு இலங்கை பெற்றிருந்த நான்கு நிலை முன்னேற்றத்தைத் தொடர்ந்து தொடரும் வளர்ச்சியாகும்.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசை, 199 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு, அந்தந்த நாட்டின் குடியுரிமையாளர்கள் முன்வீசா தேவையின்றி செல்ல முடியும் இடங்களின் எண்ணிக்கையை வைத்து தரப்படுத்துகிறது.
தற்போதைய நிலவரப்படி, இலங்கைப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 42 நாடுகளுக்கு வீசா இல்லாமல் அல்லது வருகை வீசாவுடன் (எளைய-ழn-யசசiஎயட) பயணிக்க முடியும்.
இந்த தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள நாடு சிங்கப்பூர் ஆகும்.
அதன் குடியுரிமையாளர்கள் 193 நாடுகளுக்கு வீசா தேவையின்றி செல்ல முடிகின்றது.
ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் 190 நாடுகளுக்கு அனுமதியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஏழு ஐரோப்பிய நாடுகள் 189 நாடுகளுக்கான வீசா சுதந்திரத்துடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்துள்ளன.
ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகியவை நான்காவது இடத்தில் இருக்கின்றன.
இவற்றைத் தொடர்ந்து, நியூசிலாந்து, கிரேஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளன.
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜனவரியில் இருந்த நிலவரத்தைவிட தலா ஒரு இடம் பின்வாங்கி, தற்போது முறையே ஆறாம் மற்றும் பத்தாம் இடங்களை பிடித்துள்ளன.
பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 186 நாடுகளுக்கு மற்றும் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 182 நாடுகளுக்கு செல்லலாம்.
இந்தியா கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத வகையில் மிகப் பெரிய முன்னேற்றத்தை பெற்று, எட்டு இடங்களை முன்னேறி 77வது இடத்தை பிடித்துள்ளது.
தற்போது இந்திய குடியுரிமையாளர்கள் 59 நாடுகளுக்கு வீசா இல்லாமல் செல்ல முடிகின்றது.
மற்றபுறம், பாகிஸ்தான் கீழ்தர வரிசையில் இருந்து தொடர்கிறது. அது, இறுதியில் உள்ள ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு முந்தி, கடைசி நான்காவது இடத்தில் உள்ளது.
இந்த தரவரிசை ஹென்லி ரூ பார்ட்னர்ஸ் நிறுவனத்தினால் காலாண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

