வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் முல்லைத்தீவில் நடைபெற்றது. பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும், இணையத்தின் தலைவருமான ஜோசப் பிரான்சிஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. காலை 11.00 மணிக்கு இரண்டு நிமிட அக வணக்கத்துடன் தொடங்கிய கூட்டத்தில் தலைவர் தலமையுரை ஆற்றினார்.
தொடர்ந்து செயலாளர் திரு ஆலம் கூட்ட அறிக்கையையும், பொருளாளர் கணக்கறிக்கையையும் வாசித்தனர். கூட்டத்தின் போது வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் யாப்பு நிறைவேற்றப்பட்டது. மீனவர்களின் பிரச்சினைகளை விவாதிக்க வட்டமேசை மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தின் போது ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட அன்னலிங்கம் அன்னராசா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் ஆகியோர் ஆற்றிய சேவைக்காக இணையத்தால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார, பிரசா அபிலாசா அமைப்பின் முக்கியஸ்தர் சுபாசினி மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து n

