முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளையே தற்போதைய அரசாங்கம் பின்பற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், நாமல் ராஜபக்ஸ பொருளாதார மீட்சிக்காக எந்தவிதத் திட்டமும் தற்போதைய அரசாங்கம் கையாளவில்லை என தெரிவித்தார்.
மாறாக, ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களையே முழுமையாகவே நடைமுறைப்படுத்தி வருவதாகக் கூறினார்.
கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டுமாயின், முதலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கங்களும், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும் நீக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இந்த அமைப்புகளே பகிடிவதை கலாச்சாரத்தை கல்விக்குள் கொண்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், கல்வி கொள்கையில் பெயர்கள் மாத்திரமே மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கொள்கையை கல்வி மறுசீரமைப்பில் இணைத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
நவீன உலகிற்கு ஏற்றவாறு கல்வி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் மாற்றமில்லை என்றும் கூறினார்.

