உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனக் கூறியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் செம்மணி புதைகுழி அகழ்வுகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டுஇ அவை சர்வதேசத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
செம்மணியில் நடைபெறும் அகழ்வுப் பணிகளை சட்டத்தரணி கேசவன் சயந்தனுடன் நேரில் பார்வையிட்ட பின்னர்இ ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்இ குழந்தைகள் மற்றும் குறைந்த வயதினரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்இ அவை அசாதாரண சூழ்நிலைகளில் புதைக்கப்பட்டுள்ளதோடுஇ சம்பந்தப்பட்ட உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய்இ மன்னார்இ மாத்தளை உள்ளிட்ட இடங்களில் மனித புதைகுழிகள் முந்தைய காலங்களில் கண்டறியப்பட்டதையும்இ இலங்கையில் இவைகளுக்கு உரிய விஞ்ஞானப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் இயலுமை இன்னமும் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எலும்புக்கூடுகள் உள்ளிட்ட ஆதாரங்களை சரிவர பாதுகாக்கும் வகையில் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வை தேவைப்படுவதாகவும்இ அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் சுமந்திரன் வலியுறுத்தினார்.
அத்துடன்இ நல்லிணக்கத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சி மேற்கொள்கிறது எனினும்இ உண்மைகளை மறைப்பதன் மூலம் அது சாத்தியமாகாது.
எனவேஇ சர்வதேச நிபுணர்கள் வழியாக புதைகுழி விவகாரங்களை மேலாண்மை செய்துஇ அரசாங்கம் எந்தவித தலையீடும் இல்லாமல் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

