திருச்சியில் இருந்து ஆந்திராவுக்கு காய்கறி பொருட்களை ஏற்றிச் சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர், சரக்குகளை இறக்கிய பின் சொந்த ஊருக்கு திரும்பி, பின்னர் இரண்டு நாட்கள் கழித்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரை நோக்கி பயணித்துள்ளார்.
அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் வாகனம் நின்றிருந்ததைக் கவனித்த பொலிஸார் விசாரணை நடத்த, உழவெசயனiஉவழசல தகவல்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தை சோதனையிட்ட போது, தக்காளி பெட்டிகளுக்குப் பின்னால் பதுக்கி வைக்கப்பட்ட 7 மூட்டைகளில் 240 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கஞ்சாவின் மதிப்பு இந்திய மதிப்பில் 50 இலட்ச ரூபாயாகவும், சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, கடத்தல் முயற்சி இலங்கைக்கே என்று தெரியவந்துள்ளது.

