யாழ்ப்பாணம் வத்திராயன் – மருதங்கேணி பகுதியில், 108 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று அதிகாலை இராணுவத்தையும் நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும் கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சம்பவ இடத்தில் சோதனையின்போது 54 பொதிகளில் மறைக்கப்பட்டிருந்த 108 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 21.6 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

