ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது யு320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு ‘யாழ்ப்பாணம் நகரம்’ எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் முக்கியமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், தமிழர் வாழ்வில் மிக்க முக்கியத்துவம் கொண்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா நடைபெறும் காலக்கட்டத்தில் இவ்வகை முயற்சியை மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கி அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

