இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 4ஆம் திகதி பார்வையிட தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.
இந்த விஜயத்தில், ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும் இரண்டு பணிப்பாளர்களும், யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்களும் அடங்கிய குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன.
அதே நேரத்தில், காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டார்.

