யாழ் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதே மாத்திரைகளை சுன்னாகம் பொலிசார் நேற்று(07) இரவு கைப்பற்றியுள்ளனர்.
யாழ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் நகர்பகுதியில் போதைமாத்திரைகளை விற்பனைக்கு இளைஞர் ஒருவர் எடுத்து வருவதாக குறித்த பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினர் 500 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்
தொடர்ந்து 25 வயதான சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடுன் குறித்த சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்>பொலிஸாரின் அதிரடி சோதனையில் 800 பேர் கைது.

