நெடுங்காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பொருட்டுஇ இன்று அராலி முத்தமிழ் சன சமூக நிலையத்தில் ‘விடுதலை நீர் சேகரிப்பு’ நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு முன் இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டுஇ பின்னர் அராலி பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்த விடுதலை நீரை பானையில் ஊற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இந்த முயற்சியை ‘குரல் அற்றவர்களின் குரல்’ அமைப்பு முன்னெடுத்துஇ அதன் செயற்பாட்டாளர் மு. கோமகன்இ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்இ ‘சிறகுகள்’ அமைப்பினர்கள்இ முத்தமிழ் சன சமூக நிலைய உறுப்பினர்கள்இ அராலி பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வடக்கு கிழக்கெங்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விடுதலை நீர் சேகரிப்பு திட்டம்இ எதிர்காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை விரும்பும் புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட உள்ளது.
சேகரிக்கப்படும் நீர்இ பின்னர் ஒரு விடுதலை மரம் நட்டுஇ அதற்கு ஊற்றி நினைவுகூரப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

