ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பல்வேறு முக்கிய விடயங்களை விவாதித்தனர்.
வீதி அபிவிருத்தி, உள்ளூர் சுற்றுலா வளர்ச்சி, கல்வி மேம்பாடு, பொருளாதார உயர்வு, இளைஞர்களுக்கான பயிற்சிகள் மற்றும் தொழில்வாய்ப்பு உருவாக்கம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சிகள், பாரம்பரிய வேலைத்திட்டங்களின் மீளமைப்பு, விளையாட்டு மைதான அபிவிருத்தி, மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்றவற்றை விரிவாக ஆராய்ந்து தீர்வுகள் எடுக்கப்பட்டன.
இப்பணிகளை முன்னெடுத்துக் கொள்ள விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று, வெளிநாட்டு உதவிகளுடன் திட்டங்களை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை வைத்தார்.
பகல் இரவு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பிரதேச வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசாங்கம் மற்றும் மாகாண நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் அதற்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கலந்துரையாடலில் கூறப்பட்டு, மக்களின் நலனுக்காக செயல்பட கோரப்பட்டு உள்ளது.

