தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச் செயலாளரும் கல்முனைத் தொகுதி தலைவருமான , சட்டத்தரணி அ.நிதான்சன், வடகிழக்கில் நாளைய ஹர்த்தால் அரசுக்கு முதல் சிவப்பு எச்சரிக்கையாக அமையுமென தெரிவித்தார்.
அ.நிதான்சன் கூறியதாவது, கடந்த காலங்களில் முத்தையன் கட்டு இராணுவத்தால் கொல்லப்பட்ட இளைஞனுக்கான நீதி கோரிக்கையும், அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் பொறுப்புக்கூறல் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத அரசின் மந்த நடவடிக்கைகளுக்கும் எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
வடகிழக்கில் தமிழ் பேசும் சமூகத்தின் பெரும்பாலான மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் அரசு கட்சிக்கு ஆதரவளித்தும், உள்ளூராட்சி சபை தேர்தலில் வலுவான ஆதரவினை வழங்கியும் இருந்தனர்.
இருப்பினும், தமிழ் பிரச்சினைகளை மந்தமாக கையாளும் அரசின் செயலுக்கு எதிராக இந்த ஹர்த்தால் போராட்டமாக அமையும் என்று சட்டத்தரணி அ.நிதான்சன் தெரிவித்தார்.
கடந்த கால ஆட்சியாளரான கோட்டாபாய ராஜபக்ச வீடு முன்பு இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரால் வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தற்போது அதே நிலையை சமகால அரசுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த ஹர்த்தாலின் நோக்கம் என சட்டத்தரணி அ.நிதான்சன் மேலும் தெரிவித்துள்ளார்.
அகழப்படும் அனைத்து புதைகுழிகளுக்கும் நீதி கோரி, நாளை ஹர்த்தாலில் அமைதியான முறையில் வர்த்தக நிலையங்களை மூடி, போக்குவரத்தை தவிர்த்து முழுமையாக பூரண ஆதரவு வழங்குமாறு சட்டத்தரணி அ.நிதான்சன வேண்டுகோள் விடுத்துள்ளார்

