அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் கஞ்சா விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லரிச்சல் பகுதியில் நேற்றிரவு (18-08) இரவு சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இக்கைது இடம்பெற்றது.
இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், கல்லரிச்சல், தனமல்வில, உடங்கா, புளக் ஜே மேற்கு பகுதிகளைச் சேர்ந்த 45, 63, 40 மற்றும் 22 வயதுடைய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து முறையே மொத்தம் 350 கிராம் கஞ்சா, 250 கிராம் கஞ்சா, 1400 மில்லிகிராம் கஞ்சா, 1000 மில்லிகிராம் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருட்களும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

