முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் அனுப்பியிருந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க நேற்று (22-08) கைது செய்யப்பட்ட நிலையில், 2023 செப்டம்பரில் இங்கிலாந்துக்குச் சென்றபோது அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
அந்த அழைப்பிதழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராப்டரினால் கையொப்பமிடப்பட்டு, விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டதாகும்.
பட்டமளிப்பு விழா மற்றும் விருந்திற்கான இந்த அழைப்பிதழை கட்சி வெளியிட்டுள்ளது.
மேலும், அரச நிதி தவறாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விக்ரமசிங்க மறுத்திருப்பதையும், இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உண்மையற்றவை எனவும் ஐக்கிய தேசிய கட்சி மறுபடியும் வலியுறுத்தியுள்ளது.

