ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் தெரிவித்திருப்பது கவலைக்கிடமானது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், ‘சுமந்திரன் யாழிலிருந்தே பேசுகிறாரா, இல்லை ரணிலின் இல்லத்திலிருந்தே பேசுகிறாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறியதாவது:
‘கறுப்பு ஜூலை கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்க வேண்டும்.
அதோடு, மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டும் அவர்மீது உள்ளது.
இப்படிப்பட்ட நபரை பாதுகாக்கும் வகையில் கருத்து தெரிவிப்பது கவலை அளிக்கிறது.
இந்நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம்.
பலம் வாய்ந்தவர்களுக்கு எதிராக சட்டம் செயல்படாது என்ற நிலைமை மாற்றப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல, யார் ஒருவராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது.
மேலும், இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கான தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி அநுர ஆட்சிக்கு வந்து செப்டம்பர் 21ஆம் திகதி ஒரு வருடம் நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.
குறிப்பாக வடக்கிலிருந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.’ என அவர் குறிப்பிட்டார்

