மட்டக்களப்பில் நேற்று முன்தினம் (27-08) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக ஒதுக்கிய நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
அவர் தெரிவித்ததாவது:
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கினார்.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, சாணக்கியனுக்கு 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
எனவே, கூடுதலாகக் கூறப்படும் 400 மில்லியன் ரூபா எங்கே சென்றது என்பது சந்தேகத்திற்குரியது.
இந்த மோசடி குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது ஜனாதிபதி விசாரணைக் குழு உடனடியாக நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமக்கு எதிராக அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டை முன்வைத்ததாக அன்ரனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்

