பட்டலந்த தொடர்பான ஆய்வுக்குழு அறிக்கை நீண்டகாலம் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, பத்திரிகையாளரும்; ‘பாட்டலண்டாவை கிணித்தெழுவோம்’ நூலின் ஆசிரியர் நந்தன வீரரத்த்னே ஜனாதிபதி அநுரகுமார திசானாயக்க அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெமுனு ஜயந்த வன்னிநாயக்க நடத்தும் யூடியூப் ‘பவர் ஹவர்’ நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், ஜனாதிபதி அறிவித்துள்ள அதிகாரபூர்வ சட்ட நெறிமுறையை எனகூறிக் கொண்டு குறித்த அறிக்கையை மறைத்து வைத்திருக்கிறார் என்று குற்றம்சுமத்தியுள்ளார்.
‘நான் ஜனாதிபதி செயலாளரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக அறிக்கையை கேட்டதாகவும் ஆனால் 30 ஆண்டுகள் மர்மமாக அது பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி குத்திய மர்ம முத்திரையை தற்போதைய ஜனாதிபதி உடைத்து வெளியிடும் அதிகாரம் உண்டு.
இந்த பட்டலந்த குற்றங்களுக்கு காரணமானவர்களைப் பாதுகாக்க கூடாதென அவர் தெரிவித்துள்ளார்
முன்னாள் ஜேவிபி உறுப்பினர் வீரரத்த்னே, பட்டலந்த சித்திரவதை அறைகள் பற்றிய விவரங்களை முதன்முதலில் ரவாயா பத்திரிகையில் வெளிப்படுத்தியதாக தெரிவித்த ஜெமுனு ஜயந்த வன்னிநாயக்க குறித்த அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜேவிபி இருவரும் குற்றச் சூழலில் இருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்
1995-ல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இதுபோன்ற தகவல்களின் அடிப்படையில் ஆய்வுக்குழுவை நியமிக்க வேண்டிய நிலை உருவானது என்றும் அவர் கூறினார்.
பட்டலந்த ஆய்வுக்குழு தனது அறிக்கையை 1998-ல் சமர்ப்பித்தது.
அதன் சுருக்கப்பட்ட பதிப்பு 2000-ல் வெளியிடப்பட்டது.
முழு அறிக்கை 28 தொகுதிகளாக 6,780 பக்கங்களை கொண்டுள்ளது.
இதில் பல நூறு குற்றவாளிகளின் பெயர்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி திசானாயக்கவிற்கு உடனடியாக தனது நிறைவேற்று அதிகாhரத்தை பயன்படுத்தி அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, வீரரத்த்னே ‘பாட்டலந்த கிணித்தெழுவோம்’ நூலை வெளியிட்டு, அந்த கொடூரங்களை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது

