இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 16,700 வழக்குகளில் 6,700 வழக்குகள் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவ் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கத்துலந்த தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
மீதமுள்ள சுமார் 10,000 வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

